தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை, மே 21 அன்று மின் விநியோகம் இருக்காது. கடையநல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, போகநல்லூர், கண்மணியாபுரம், பால அருணாச்சலபுரம், கம்பனேரி, இடைகால், சிவராமபேட்டை, கொடிக்குறிச்சி, நயினாரகரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயகசுந்தரம் தெரிவித்துள்ளார்.