தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரு தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்த கற்பகவல்லி என்பவரின் வீட்டுக்குச் சென்ற வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. சதன் திருமலைகுமார், தாயை இழந்து ஆதரவற்று நிற்கும் இரு பெண் குழந்தைகளையும், உறவினர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஏற்கனவே உடல்நலக் குறைவால் தந்தையை இழந்த நிலையில், குழந்தைகளின் எதிர்காலத்துக்கு அரசு உதவி பெற்றுத்தரும்படி எம்.எல்.ஏவிடம் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.