தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சேர்ந்தமரம் பகுதியைச் சேர்ந்த முருகன் (40) கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு, மனைவியிடம் தகராறு செய்துள்ளார். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த முருகன் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.