தென்காசியில் கும்பாபிஷேக திருப்பணிகள்.. ஆட்சியா் ஆய்வு

தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறைய அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக திருப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல் கிஷோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இக்கோயிலில் ஏப். 7ஆம் தேதி புனராவர்த்தன ரஜதபந்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

 இதையொட்டி கோயில் ராஜகோபுரத்தில் வர்ணம்பூசுதல், சுவாமி, அம்மன் சந்நிதிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல், தரைதளம் அமைத்தல், கழிவு நீரோடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜைகள் ஏப். 3ஆம்தேதி தொடங்குவதை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் யாகசாலைக்கான குண்டங்கள் அமைக்கும்பணி நடைபெற்று வருகிறது. 

இப்பணிகளை பார்வையிட்ட ஆட்சியர், கும்பாபிஷேகத்துக்கு மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து கோயில் அதிகாரிகளிடம் கேட்டறிந்து, அதற்கான ஆலோசனைகளை வழங்கினார். மேலும், கோயில் வளாகம் முழுவதும் திருப்பணிகளை ஆய்வு செய்து, அவற்றை விரைந்து முடிக்க கோயில் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி