கடையநல்லூர் பஸ் விபத்து பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 3 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50, 000 நிவாரணமாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி