தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் தனபாக்கியம் (57) என்பவரின் கழுத்தில் அணிந்திருந்த தாலிச்சங்கிலியை திருடிச் சென்ற சிவாவை தென்காசி ரயில்வே போலீஸாா் மேட்டூா் ரயில் நிலையத்தில் கைது செய்தனா். அவரிடமிருந்து தாலிச்சங்கிலியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தனபாக்கியம், சில நாள்களுக்கு முன் பாவூா்சத்திரம் அரசு மருத்துவமனைக்குச் செல்லும்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.