கடையநல்லூரில் பெண்ணிடம் நகை பறிப்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் பரமசிவன் மனைவி மாரியம்மாள் (50) சந்தைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, மர்மநபர் ஒருவர் அவரை வழிமறித்து 68 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார். அவரது கூச்சலால் அக்கம்பக்கத்தினர் அந்த நபரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், கடையநல்லூர் வானுவா் தெருவைச் சேர்ந்த சேக்மைதீன் மகன் அருமன் சாலிஹ் (30) எனத் தெரியவந்தது. போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி