நிபந்தனையின்றி நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடையநல்லூரிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆயிரக்கணக்கான மூட்டை நெல் குவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் இறுதி வரை அறுவடை நடைபெறும் என்றும், அனைத்து நெல்லையும் நிபந்தனையின்றி அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சில நாட்களில் கொள்முதல் நிலையங்களை மூட நடவடிக்கை எடுக்கப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். எனவே, தமிழ்நாடு அரசு இந்த மாதம் இறுதி வரையிலும் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி