குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த இரு தினங்களாக சாரல் மழை பெய்து வருகிறது. பேரருவியில் தண்ணீர் அதிகமாக விழுவதால் அருவியின் மையப்பகுதிக்கு யாரும் செல்லாத வாறு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 

பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகமாக விழுந்தாலும் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். நேற்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது சாரல் மழையும், குளிர்ந்த காற்றும் நிலவியது. சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவாக இருந்தது.

தொடர்புடைய செய்தி