தென்காசி மாவட்டம், இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா பள்ளி வளாகத்தில், வரும் 28.11.2025 அன்று நடைபெறவிருக்கும் ஆடவர்களுக்கான ஹாக்கி ஜூனியர் உலக கோப்பை போட்டியை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் வெற்றிக் கோப்பையானது மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமையில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணிஸ்ரீகுமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.