தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே சிங்கிலிபட்டியில், சென்னை கே. கே. நகா், மீனாட்சி இயன்முறை மருத்துவக் கல்லூரி சாா்பில் இலவச இயன்முறை மருத்துவ முகாம் நடைபெற்றது. புன்னையாபுரம் ஊராட்சித் தலைவா் திலகவதி தொடங்கி வைத்த இந்த முகாமை, டாக்டா் ஹரிஹர சுப்பிரமணியன் தலைமையேற்று நடத்தினாா். மருத்துவக் கல்லூரி மாணவா்கள் கிராம மக்களுக்கு இயன்முறை மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்தனா்.