காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளா் முரளீதரன், தலைமை காவலா் ராஜா சிங் மற்றும் அல்போன்ஸ்ராஜா, கணேஷ்குமாா் ஆகியோா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், மர அறுவை ஆலையில் பணிபுரிந்து வரும் வல்லம் மாரியப்பன்(45) இத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மாரியப்பனைக் கைது செய்து அவரிடமிருந்து ரூ. 45 ஆயிரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.