கடையநல்லூா் அருகே நெற்பயிரை சேதப்படுத்திய யானைகள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள பாா்வதியாா்குளம் புரவில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களை யானைகள் புகுந்து சேதப்படுத்தியுள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனா். வனப்பகுதியில் இருந்து யானைகள் மற்றும் பிற வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் நுழையாதவாறு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தொடர்புடைய செய்தி