குற்றாலம்: ரீல்ஸ் வெளியிட்ட பிரபல காமெடி நடிகர்கள்

தென்காசி மாவட்டத்தில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். இந்த நிலையில், குற்றாலம் மெயின் அருவிக்கு குளிக்க வந்த நடிகர்கள் முத்துக்காளை மற்றும் கிங்காங் ஆகியோர் எடுத்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கிங்காங் 'எனக்கு தண்ணீரைக் கண்டாலே அலர்ஜி' என்று கூறி குளிக்க மறுக்க, முத்துக்காளை அவரை தூக்கி அருவியில் குளிக்க வைக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி