செங்கோட்டை ஆரியநல்லூர் அரசு தொடக்கப் பள்ளியில் இடிந்து விழுந்த மேற்கூரை கட்டடம் பயன்பாடாற்றது என்றார் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல்கிஷோர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள ஆரியநல்லூர் அரசு தொடக்கப் பள்ளியில் பயன்பாட்டில் இல்லாத கட்டடத்தின் மேற்கூரை மார்ச் 20 ஆம்தேதி இடிந்து விழுந்துள்ளது. இக்கட்டடம் மாணவர், மாணவிகள் மற்றும் அலுவலகப் பயன்பாட்டில் இல்லை. ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள் மற்றும் அலுவலக பணியாளர்களின் நலன் கருதி பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் செங்கோட்டை வட்டார கல்வி அலுவலகத்தை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றும்படி செங்கோட்டை வட்டார கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.