கடையநல்லூரில் குழந்தைகள் மையக் கட்டடம் திறப்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரின் முயற்சியால் புனரமைக்கப்பட்ட குழந்தைகள் மையக் கட்டடம் திறக்கப்பட்டது. இங்கு தினசரிச் சந்தை அருகேயுள்ள குழந்தைகள் மையத்தில் 16 பேருக்கு விளையாட்டுடன் கூடிய கல்வி கற்பிக்கப்படுவதுடன், சத்துணவுகள் வழங்கப்படுகின்றன. இக்கட்டடம் பராமரிப்பின்றி இருந்துவந்தது. இதையறிந்த காவல் ஆய்வாளர் ஆடிவேல் முயற்சி மேற்கொண்டு, நன்கொடையாளர்கள் மூலம் கட்டடத்தில் வண்ணங்கள் தீட்டி, மின்விசிறி, ஒளிவிளக்குகள் பொருத்தி புனரமைத்துள்ளார். இதற்கு தலைமைக் காவலர்கள் முத்துராஜ், சங்கர், காளிராஜ் ஆகியோரும் உறுதுணையாக செயல்பட்டனர். இந்நிலையில், புனரமைக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. நகரமன்றத் தலைவர் ஹபீபுர்ரஹ்மான், காவல் ஆய்வாளர் ஆடிவேல், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பர்கத்சுல்தானா, சமூக ஆர்வலர் சகிலாபானு, நன்கொடையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, இந்த மையத்துக்கு இருக்கைகள், விளையாட்டு-கற்றல் உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி