இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை முதல் அருவிகளில் தண்ணீர்வரத்து சற்று குறைந்ததையடுத்து, ஐந்தருவியிலும், பேரருவி, புலியருவி, சிற்றருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டது. இந்த அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
பழையகுற்றாலம் அருவியில் தண்ணீர்வரத்து குறையாததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. குற்றாலத்தில் நேற்று நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழையும், குளிர்ந்தகாற்றும் நிலவியது. விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.