தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே சொத்து தகராறில் ஒருவரைத் தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திரிகூடபுரத்தைச் சோ்ந்த மகாராஜன் (42) என்பவரை, அதே பகுதியைச் சோ்ந்த பால் ராமரும் அவரது கூட்டாளிகளும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து புகாரின்பேரில், சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து பால்ராமா், குட்டிதுரை, சாமிதுரை ஆகியோரை கைது செய்தனா்.