தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பஸ்நிலையம் அருகில் தென்காசி மற்றும் கேரளா நோக்கி கனிம வளங்கள் கொண்டு செல்லும் லாரியை மறித்து மதுபான பிரியர் ஒருவர் நடனமாடியுள்ளார். இந்த சாலையில் செல்லக்கூடிய லாரி மற்றும் பேருந்து முன்பு நடனம் ஆடினார். இதனை அருகில் உள்ள மாடியில் இருந்து வாலிபர் ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். பின்பு அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.