அப்போது, அங்குள்ள சுடுகாடு அருகே நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனா். அவா்கள் கீழப்புதூா் ராமா் மகன் குணசேகரன்(28), முருகன் மகன் செல்வக்குமாா் (25) ஆகியோா் என்பதும், விற்பனைக்காக 2 கிலோ 400 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா், கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
புகையிலைப் பொருள்: கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் மற்றும் போலீஸாா் பால அருணாசலபுரம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியே பைக்கில் வந்தவரைப் பிடித்து விசாரித்ததில், அவா் போகநல்லூா் பள்ளிக்கூட தெருவை சோ்ந்த வன்னியன் மகன் தங்கராஜ் (36) என்பதும், பைக்கில் மூன்றரை கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கொண்டுசெல்வதும் தெரிய வந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.