நெல்லை ஏர்வாடி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் கலைச்செல்வன் போக்சோ வழக்கில் கைதான நிலையில் அவர் சிறைக்கு செல்லாமல் மருத்துவமனையில் ஹாயாக இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. இந்நிலையில் கலைச்செல்வனுக்கு இதய கோளாறு இருந்ததால் சிகிச்சை பெற்றதாகவும் இதய மருத்துவரின் ஒப்புதல் பெறப்பட்டு இன்று(அக்.31) பகல் 12 மணிக்கு அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டதாகவும் நெல்லை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.