தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் (23) என்பவர், நிதி நிறுவனக் கடன் மூலம் சரக்கு வாகனம் வாங்கி தொழில் செய்து வந்துள்ளார். கடனைச் செலுத்தாததால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மனமுடைந்த அவர் நவம்பர் 8ஆம் தேதி விஷம் கலந்த மது அருந்தி மயங்கினார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இது குறித்து ஆலங்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.