இந்நிலையில் அவர் விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. குடும்பத்தினர் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். இதனால், மதனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் ஊத்துமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவரது உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர். இச்சம்பவம் குறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ டிரெய்லர் வெளியீடு: ஜூலை 10ல் படம் திரையரங்கு