தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி அம்பேத்கா் நகரைச் சேர்ந்த வேல்முருகன் மகன் அம்பேத்கர் அரசு(21). இவர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்தபோது அப்பகுதியில் உள்ள பேன்சி கடையில் வேலை செய்து வந்த 16 வயது சிறுமியும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனராம். அதன் பின்னர் இருவரும் புதுப்பட்டியில் வசித்து வந்தனர். இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் 1098 க்கு வந்த புகாரை அடுத்து ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அம்பேத்கர் அரசு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.