ஆலங்குளம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே பனையடிப்பட்டி சோ்ந்த சசிகுமாா் (32) என்ற தொழிலாளி, கடன் தொல்லையால் மன வேதனையில் இருந்த நிலையில், விவசாயத்திற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லியைக் குடித்து மயங்கி விழுந்தாா். அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இது குறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி