நேற்று காலையில் தூங்கி எழுந்ததும் அருகில் உள்ள கடைக்கு டீ குடிக்க பரமசிவன் சென்றதாக கூறப்படுகிறது. அவரது இரு மகன்களும் வீட்டின் மாடியிலும், உமா கீழே உள்ள அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனா்.
அப்போது கத்தியுடன் வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா், உமாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பிவிட்டாா்.
கடையிலிருந்து பரமசிவன் வீடு திரும்பியபோது மனைவி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு பாவூா்சத்திரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், உமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விசாரணை நடத்தி வருகின்றனா்.