சுரண்டையில் பஸ்ஸிலிருந்து விழுந்த பெண் படுகாயம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடையாலுருட்டி கிராமத்தைச் சேர்ந்த சேர்மன் என்பவரது மனைவி செல்வி. இவர் சுரண்டையில் படிக்கும் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு புளியங்குடி செல்லும் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது சுரண்டை பஸ் ஸ்டாண்ட் சாலையில் ராட்சத பள்ளத்தில் பஸ் ஏறி இறங்கியபோது இதில் எதிர்பாராவிதமாக பஸ்சிலிருந்து பெண் தவறி விழுந்து படுகாயமடைந்தார். தவறி விழுந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குண்டு குழியுமாக காணப்படும் சாலையே சம்பந்தப்பட்ட அதிகாரி வந்து பார்வையிட்டு உடனே சரி செய்துதரப்படும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர்.

தொடர்புடைய செய்தி