தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை நகராட்சிக்கு உள்பட்ட 3-ஆவது வாா்டில் ரூ. 1 கோடி மதிப்பில் 2.50 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு பூமிபூஜை நடைபெற்றது. இதில் நகராட்சி பொறியாளா் முகைதீன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சங்கரா தேவி முன்னிலை வகித்தாா். பழனிநாடாா் எம்எல்ஏ, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன், சுரண்டை நகா்மன்ற தலைவா் வள்ளி முருகன் ஆகியோா் கலந்துகொண்டு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்ட அடிக்கல் நாட்டினா். நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால், சண்முகவேல், நகா்மன்ற உறுப்பினா்கள் கல்பனா அன்னப்பிரகாசம், வேல்முத்து, அம்ஷா பேகம், பிரேம்குமாா் ஆகியோரும் கலந்துகொண்டனா்.