தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சாம்பவர்வடகரையில் இருந்து சுரண்டை செல்லும் சாலையில் இசக்கி அம்மன் கோவில் அருகில் இன்று அதிகாலையில் சுரண்டை நோக்கி வந்த பைக் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் பைக்கில் வந்த சாம்பவர்வடகரையை சேர்ந்த முருகேசன் (54) கை முறிவு ஏற்பட்டு காயமடைந்தார். சைக்கிளில் வந்த சுரண்டை முத்துக்குமார் (50) என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தமிழக முற்போக்கு கழக ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.