தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசு நிலத்தில் இருந்த வேப்பமரத்தை அனுமதியின்றி மர்ம நபர்கள் வெட்டி சாய்த்து விட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கழுநீர்குளம் ஊராட்சி கல்லூத்து மாடசாமி கோயில் அருகே வேப்பமரம் நின்றிருந்தது. இதை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிச் சாய்த்துள்ளனர். இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் ஆலங்குளம் வட்டாட்சியர் ஓசன்னா பொர்னாண்டோ ஆய்வு மேற்கொண்டார். மரத்தை அனுமதியின்றி வெட்டியவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.