நிகழ்ச்சியில் லட்சுமிபுரம் கிளைக்கழக செயலாளர் கணபதி தலைமை தாங்கினார். அச்சம்குன்றம் கிளைக்கழகச் செயலாளர் மாடசாமி முன்னிலை வகித்தார். ஒன்றிய பிரதிநிதி எம்.பி. முருகன் வரவேற்றுப் பேசினார். முன்னாள் மாவட்டக் கழக செயலாளர் சிவபத்மநாதன் அவர்கள் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளி காளிமுத்து அவர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கினார்.
இதில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் செல்வக்கொடிராஜாமணி, மாவட்டத் தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகையா, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணித் தலைவர் ஒன்றியக் கவுன்சிலர் அந்தோணிசாமி, முத்தம்மாள்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.பி. முருகன், பரங்குன்றாபுரம் கிளைக்கழக செயலாளர் மனோகரன், ராமனூர் கிளைக்கழக செயலாளர் கணேசன், ஒன்றிய பிரதிநிதி பரமசிவம், ஊத்துமலை கோல்டன் ராஜா, கார்த்திக் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.