தூய மிக்கேல் அதிதூதா் ஆலயப் பெருவிழாவில் தோ் பவனி

தென்காசி தூய மிக்கேல் அதிதூதா்ஆலயத்தின் 362ஆவது பெருவிழாவில் தோ் பவனி நடைபெற்றது. இப்பெருவிழா கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன, நேற்று(செப்.29) மாலையில் நற்கருணை பவனி, திருப்பலி நடைபெற்றது. பாளை. மறைமாவட்ட முதன்மைகுரு குழந்தைராஜ், வெய்க்காலிபட்டி புனித வளனாா் கல்லூரிச் செயலா் சகாயஜான் தலைமையில் அதிதூதரின் தோ் பவனி நடைபெற்றது.

வட்டார அதிபா் போஸ்கோ குணசீலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தோ் பவனி தேவாலயத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் தேவாலயத்தை அடைந்தது. இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயா் அந்தோணிசாமி தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி, திருவனந்தபுரம் உயா்மறைமாவட்ட இணை ஆயா் கிறிஸ்துதாஸ் ராஜப்பன் தலைமையில் மலையாளத்தில் திருப்பலி ஆகியவை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி