தென்காசி மாவட்டம் சுரண்டை வரகுணராமபுரம் சந்தை அருகில் ரூ. 4.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. நகராட்சி ஆணையர் அசோக் தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் முன்னிலை வகித்தார். எஸ். பழனி நாடார் எம்எல்ஏ, மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், நகரமன்ற தலைவர் வள்ளி முருகன் ஆகியோர் நிழற்குடையை திறந்து வைத்தனர்.