தென்காசி: மரங்கள் வெட்டுவதைத் தடுக்கக் கோரி மனு

மா. கல்லத்திகுளத்தில் தோராயமாக 400 ஏக்கர் வேளாண் நிலப் பரப்பில் மாமரம், பலாமரம், நெல்லிமரம், சப்போட்டாமரம், வேப்பமரம், புளியமரம், முந்திரிமரம், தென்னைமரம், பனைமரம், சவுக்குமரம், அசோகமரம், தேக்குமரம், மலைவேம்பு, கால்நடைத் தீவனப் பயிர்கள் மற்றும் மருத்துவத் தாவரங்கள் போன்றவற்றை சில தனியார் வேளாண் நிறுவனங்கள் ஊர்ப் பொதுமக்கள் உதவியுடன் வேளாண்மை செய்து வந்தனர். 

இதன் மூலம் கிராமப் பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். ஆனால் தற்போது சூரியஒளி மின்உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இந்த 400 ஏக்கர் வேளாண் நிலப் பரப்பில் உள்ள அனைத்து மரங்களையும் வெட்டி சூரியஒளி மின்உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு முயற்சி செய்து வருகிறது. இந்த மரங்களை வெட்டுவதைத் தடுக்க கோரி மா.கல்லத்திகுளம் ஊர்ப் பொதுமக்கள் அரசு அலுவலரிடம் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி