தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இன்று இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துயரச் செய்தியைக் கேட்டு தவெக தலைவர் விஜய் மிகுந்த மன வேதனை தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அவர், காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி உயர்தர சிகிச்சை அளிக்க தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.