தோரணமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக சஷ்டி சிறப்பு வழிபாடு

தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மலையின் மேல் அமர்ந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தோரணமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக சஷ்டி விரதம் சிறப்பு வழிபாட்டில் முருக பெருமானுக்கு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முருகனுக்கு 32 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரத்துடன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அலங்கார தீபாராதனையுடன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கப்பட்டது. இதில் உள்ளூர், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி