பாவூா்சத்திரத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா பவனி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாவூர்சத்திரத்தில் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயம் சார்பில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் பவனி நடைபெற்றது. இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பங்கேற்று, பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கூறி இனிப்புகள் வழங்கினர். அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கிறிஸ்து பிறப்பின் பாடல்கள் பாடப்பட்டன. சிஎஸ்ஐ ஆலயத்திலிருந்து புறப்பட்ட பவனி திருநெல்வேலி - தென்காசி பிரதான சாலை, கடையம் சாலை, விஏ நகர், சுரண்டை சாலை, குறும்பலாப்பேரி விலக்குவரை சென்றது. ஏற்பாடுகளை சேகரகுரு பர்னபாஸ், சபை ஊழியர் தினகர் சந்தோஷசிங், நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி