ஆலங்குளம் அருகே மணல் கடத்தல்: 3 போ் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளம் விலக்குப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் உரிய அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் சரளை மண் எடுத்துச் செல்லப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் ஆலங்குளம் போலீசார் அங்கு சென்றபோது, போலீசாரைக் கண்டதும் 3 பேர் ஓட்டம் பிடித்தனர். 

அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தபோது மணல் எடுப்பதற்கு எவ்வித அனுமதியும் பெறவில்லை என்பதும், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் சிவலார்குளம் முத்தையா மகன் மாரியப்பன் (38), அய்யனார்குளம் மாரியப்பன் மகன் சுப்பிரமணியன் (24), கீழக்கரும்புளியூர்த்து சிவன் மகன் ராஜேஷ் (38) என்பதும் தெரியவந்தது. 

சிவலார்குளம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிந்து மேற்கண்ட மூவரையும் கைது செய்தனர். மேலும், மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம், டிராக்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி