ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே உள்ள 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வணிக வளாகம் வலுவிழந்து காணப்பட்டது. இதை இடித்து புதிய வணிக வளாகம் கட்ட ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடைகளை காலி செய்ய அவகாசம் கோரி மனு அளித்திருந்த கடைக்காரர்களில் சிலர், வாடகை பாக்கியை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என ஆணையாளர் கடிதம் அனுப்பியிருந்தார். இருப்பினும், 3 கடைக்காரர்கள் வாடகையை செலுத்தாததால், போலீஸ் பாதுகாப்புடன், அதிகாரிகள் அந்தக் கடைகளுக்குப் பூட்டு போட்டனர்.