தென்காசி நகராட்சியில் காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்

தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சி 33 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சனை தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மலையான் தெரு பகுதியில் தொடர்ந்து நிலவும் குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக மலையாள பகுதி பொதுமக்கள் அனைவரும் காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தில் முன்பு தங்கி நிரந்தர தீர்வு வரும் வரை குடியேறும் போராட்டம் நடத்தப்பட உள்ளனர்.

 இதில் தென்காசி நகராட்சி அலுவலகம் முன்பும் மலையான் தெரு பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக பகுதிகளை பார்வையிட்டு குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்.

தொடர்புடைய செய்தி