ஆனால் இக்கழிவறை எவ்வித பயன்பாடுமின்றி, மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் பூட்டியே காணப்படுகிறது. இப்பகுதி மக்கள் சுகாதார வளாகம் இல்லாத காரணத்தினால் திறந்த வெளி கழிப்பிடம் செல்லும் அவல நிலை உள்ளது.
உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு அந்த கழிப்பிட கட்டிடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.