தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் மற்றும் அச்சன்புதூா் துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 18) பராமரிப்புப் பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயகசுந்தரம் தெரிவித்துள்ளாா். பாவூா்சத்திரம், கீழப்பாவூா், மேலப்பாவூா், அச்சன்புதூா் உள்ளிட்ட பல கிராமங்களில் மின் தடை ஏற்படும்.