கடையம்: வேட்டை தடுப்பு காவலர் தற்கொலை

தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள கடையம் வனச்சரக அலுவலகத்தில் வேட்டை தடுப்பு காவலராக களக்காடு பகுதியை சேர்ந்த சுதாகர் (32) என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கும் இவரது மனைவி நந்தினிக்கும் சுதாகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை வந்துள்ளதாக தெரிகிறது. 

இதில் மனமுடைந்த சுதாகர் வீட்டில் ஆழ்ந்த நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி