கூட்டத்தில், மத்திய அரசாலும், மாநில அரசாலும் பல்வேறு துறைகள் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆட்சியா் ஏ. கே. கமல்கிஷோா் முன்னிலை வகித்தாா். மாவட்ட வன அலுவலா் அகில்தம்பி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சித் துறை) ஏழிசைச்செல்வி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஷேக் அப்துல்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.