தென்காசி திருவள்ளுவர் கழக அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பேராசிரியர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தென்காசி மூத்தோர் மன்றம் எம். ஆர். அழகராஜா முன்னிலை வகித்தார். கழகப் புலவர் கா. ச. பழனியப்பன் முன்னோட்டம் வழங்கினார்.'வள்ளுவச் சிந்தனையில் மானுட வாழ்வைப் பெரிதும் மேம்படுத்துவது' என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில், 'பண்புநலனே' என்ற தலைப்பில் க. சோ. கல்யாணசிவகாமிநாதன், உஷா முத்துகிருஷ்ணன், சரவணசெல்வனும், 'வினைத்திறனே' என்ற தலைப்பில் சேரை பாலகிருஷ்ணன், இந்திரா ஜெயச்சந்திரன், உமா சங்கர் ஆகியோரும் பேசினர்.திருவள்ளுவர் கழக செயலர் இராம. தீத்தாரப்பன், பத்மாகணபதிசுப்பிரமணியன், அப்துல்அஜீஸ், பத்மானந்தம் , டாக்டர் தங்கபாண்டியன், கழுகுமலை, கடையம் திருவள்ளுவர் கழகத்தினர் கலந்து கொண்டனர்.