பாபநாசபுரத்தில் பயணிகள் நிழற்குடை திறப்பு

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே பாபநாசபுரத்தில் ரூ. 6.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. சுரண்டை நகராட்சி ஆணையாளா் அசோக் தலைமை வகிக்க, எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், நகா்மன்றத் தலைவா் வள்ளி முருகன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு பயணியா் நிழற்குடையைத் திறந்து வைத்தனா். நகராட்சி பொறியாளா் முகைதீன், நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால், நகர திமுக பொறுப்பாளா் கூட்டுறவு கணேசன், வா்த்தக அணி அமைப்பாளா் முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தாயாா் தோப்பு ராமா் வரவேற்றாா்.

தொடர்புடைய செய்தி