தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை நெசவாளர் தெருவைச் சேர்ந்த கணேசன் (37) மே 18 வேலைக்குச் சென்று வீடு திரும்பாத நிலையில், அவரது மனைவி முத்துலட்சுமி போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், கணேசன் கம்பாளி குளத்தில் குளிக்கச் சென்றது தெரியவந்தது. விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அவரது உடலை மீட்டனர். குளித்தபோது ஆழமான பகுதியில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.