தென்காசி: அரசுப் பேருந்து காா் மீது மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

தென்காசியிலிருந்து திருநெல்வேலிக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ராமச்சந்திரபட்டணம் மடத்தூர் விலக்குப் பகுதியில் பைக்கில் முதியவர் ஒருவர் திடீரென சாலையின் குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பேருந்து ஓட்டுநர் முதியவரின் மீது மோதாமல் இருப்பதற்காக வலதுபக்கமாக பேருந்தைத் திருப்பியுள்ளார். 

அப்போது, மடத்தூர் விலக்குப் பகுதியில் இருந்து நான்குவழிச் சாலை பகுதியைக் கடப்பதற்காக வந்த கார் மீது பேருந்து மோதியதாம். இதில், காரில் பயணித்த பாவூர்சத்திரம் அருகேயுள்ள பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் (60) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரில் பயணித்த மாரிச்செல்வம் (36), தமிழரசி (31), நிதிஷ் (5), அருணேஷ் (5) ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்தனர். 

காயமடைந்தவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநரான அகரகட்டுவைச் சேர்ந்த மிக்கேல் அருளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி