தென்காசி: ஊராட்சித்துறை நிா்வாக இயக்குநரிடம் எம்எல்ஏ கோரிக்கை மனு

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்க வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நிர்வாக இயக்குநரிடம் எஸ். பழனி நாடார் எம்எல்ஏ கோரிக்கை மனு அளித்தார். அவர் அளித்த மனு: தென்காசி தொகுதிக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில் வாடியூர், அச்சங்குன்றம், கீழக்கலங்கல் உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் குடிசைகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் விண்ணப்பித்து கலைஞரின் கனவு இல்லத் திட்டத்திற்கான தகுதியான பயனாளிகளை அரசு அதிகாரிகளே தேர்வு செய்து வைத்துள்ளனர். 

ஆனால் அந்த பயனாளிகளுக்கு தற்சமயம் வரை கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு பணி ஆணை கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆதலால் தென்காசி தொகுதிக்குள்பட்ட ஏழை, எளிய மக்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேர்வு செய்யப்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் வீடு கட்டுவதற்கு விரைவாக பணி ஆணையை வழங்க வேண்டும் என்றார். 

இதேபோல், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பாவூர்ச்சத்திரம் காமராஜர் தினசரி காய்கனி சந்தை முதல் ஆவுடையானூர் வரை செல்லும் தார்ச்சாலை போடப்பட்டு, 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த சாலை மிகவும் பழுதடைந்து உள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் விபத்துகளால் பாதிக்கப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்தி