தென்காசி: மினி பஸ் பைக் மீது மோதி விபத்து

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேட்டூர் ரயில்வே கேட்டில் ரயில் செல்வதற்காக நேற்று மாலையில் கேட் அடைக்கப்பட்டது. அப்போது இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கேட் திறந்த போது பாவூர்சத்திரத்தில் இருந்து தோரணமலைக்குச் சென்ற மினி பேருந்து ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் பைக் மீது மோதியது. 

இதில் பேருந்தின் அடியில் இருசக்கர வாகனம் சிக்கிய நிலையில் அவர் லேசான காயங்களுடன் பத்திரமாக வீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி